அக்காவே திட்டம் தீட்டிய பயங்கரம்.. 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை!

அக்காவே திட்டம் தீட்டிய பயங்கரம்.. 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை! - Daily news

13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்த சிறுமியின் அக்காவே திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் தனது 13 வயது தங்கையுடன் வசித்து வந்தார்.

இப்படியான சூழலில் தான், அந்த 19 வயதான இளம் பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பாலியல் உறவில் இருந்து வந்திருக்கிறார்.

இந்த விசயம், அந்த இளம் பெண்ணின் தங்கையான அந்த 13 வயது சிறுமிக்கு தெரிய வந்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த 13 வயது சிறுமி, தனது அக்காவின் அந்த பாலியல் உறவு குறித்து, தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், சம்மந்தப்பட்ட அந்த 19 வயது இளம் பெண்ணை கடுமையாக திட்டி எச்சரித்து உள்ளனர். 

இதனால், தனது 13 வயது தங்கை மீது கடும் ஆத்திரம் அடைந்த அவரது 19 வயது அக்கா, தனது தங்கைக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், தங்கையை எப்படியாகவது வழி வாங்க வேண்டும் என்றும், திட்டம் தீட்டி இருக்கிறார்.

அதன் படி, தனது தங்கையை அருகே உள்ள கரும்பு காட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு, அந்த இளம் பெண் தான் உறவில் இருந்த இளைஞன் மற்றும் அவனது சக ஆண் நண்பர்கள் 5 பேரை ரகசியமாக அங்கு ஏற்கனவே வரவழைத்து உள்ளார்.

அதன்படி, அங்கிருந்த மொத்த 5 இளைஞர்களும், அந்த 19 வயது அக்காவின் கண் முன்னரே அவரது சொந்த தங்கையை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

இதனால், அந்த 13 வயது சிறுமி அலறி துடித்த நிலையில், தன்னை காப்பற்றும் படி, தனது அக்காவிடம் கெஞ்சி உள்ளார்.

ஆனால், இதில் துளியும் மனம் இறங்காத அந்த அக்கா, தனது தங்கையை அவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்வதை பார்த்துக்கொண்டே இருந்து உள்ளார்.

பின்னர், அந்த சிறுமியின் துப்பட்டாவை வைத்தே, அந்த சிறுமியை அந்த கும்பல் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து படுகொலை செய்து உள்ளனர். இதில், அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, மகளை காணவில்லை என்று, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் உடலை தேடி கண்டுப்பிடித்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், “இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில், அந்த 13 வயது சிறுமியின் சொந்த அக்காவே, இந்த பாலியல் பலாத்கார படுகொலைக்கு திட்டிம் தீட்டினார்” என்கிற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டனர்.

குறிப்பாக, தங்கயை கொடூரமாக கொலை செய்த சம்பவத்திற்கு பிறகு வீடு திரும்பிய அந்த இளம் பெண், எதுவும் நடக்காதது போல் இயல்பாகவே நடந்துக்கொண்டார்” என்றும், விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்து உள்ளனர். 

அந்த இளம் பெண்ணின் வாக்கு மூலத்தை அடுத்து, அந்த இளைஞர்கள் ரஞ்சித் செளஹான், அமர் சிங், அன்கித், சந்தீப் செளஹான் ஆகியோரை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர். மேலும், அந்த இளம் பெண்ணையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment