தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பலவிதமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சிபி சத்யராஜ், அடுத்ததாக இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் அட்வெஞ்சர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் ரேஞ்சர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  அடுத்ததாக சிபி சத்யராஜ் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் வட்டம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  சில தினங்களுக்கு முன் சிபி சத்யராஜ் நடித்த மாயோன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது

டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ள ஆக்சன் ஃபேண்டசி த்ரில்லர் திரைப்படமான மாயோன் படத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் மாயோன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதையில், இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாயோன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில் படக்குழுவினர் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் மாயோன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரோடக்சன் நிறுவனம் மாயோன் படத்திற்கு “மற்றொரு பக்கம் இருக்கிறது… மற்றொரு அதிகாரம் இருக்கிறது… மற்றொரு பிரபஞ்சம் இருக்கிறது…” என குறிப்பிட்டு மாயோன் சாப்டர்-2 படம் விரைவில் தயாராகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் மாயோன் சாப்டர் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என தெரிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அசத்தலான மாயோன் சாப்டர் 2 அறிவ்ப்பு போஸ்டர் இதோ…
 

#Maayon 🦅 has another side to it.. another Chapter.. another Universe?
A Grand Visual treat of our traditional values with thrills and twists

“Do you live in darkness or does the darkness lives in you?”#MaayonChapter2 ♾ to begin soon.Grand Deepavali 2023 release pic.twitter.com/fkehicedev

— Double Meaning Production (@DoubleMProd_) June 30, 2022