முதலிரவில் பயங்கரம்.. அலறல் சத்தம்.. மயங்கி கிடந்த புதுப்பெண்! தப்பித்து ஓடிய மாப்பிள்ளை..

முதலிரவில் பயங்கரம்.. அலறல் சத்தம்.. மயங்கி கிடந்த புதுப்பெண்! தப்பித்து ஓடிய மாப்பிள்ளை.. - Daily news

முதலிரவு அறையில் புதுப் பெண்ணின் அலறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால், பயந்துபோன உறவினர்கள் கதவை தட்டி திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, புதுப் பெண் மயங்கி கிடந்த நிலையில், மணமகன் அங்கிருந்து தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நாகராஜ் - பரமேஸ்வரி தம்பதியிரின் 26 வயது மகள் நளினி என்பவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்து உள்ள தொழுதூரைச் சேர்ந்த 37 வயதான ராஜ்குமார் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 27 ஆம் துதி முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. 

இதனையடுத்து, திருமணம் நடந்ததும் அன்றைய தினம் இரவு புதுமன தம்பதியருக்கு மணமகன் வீட்டில் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதன்படி, முதலிரவு அறையில் அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் முதலிரவு அறையில், தனிமையில் இருந்து உள்ளனர்.

அப்போது, மணமகன் ராஜ்குமார் நளினியிடம் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவு வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. இதனால், பயந்து போன அந்த புதுப்பெண் அந்த நள்ளிரவு நேரத்தில் அலறி துடித்து இருக்கிறார். 

இப்படியாக, தொடர்ச்சியாக அந்த புதுப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில், வெளியில் இருந்த மணப்பெண்ணின் உறவினர்கள் பயந்து போய், கதவை தட்டி உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த புதுப்பெண் வலி தாங்க முடியாமல் அந்த முதலரவு அறையிலேயே மயங்கி விழுந்து உள்ளார். இனதால், பயந்து போய் அந்த மாப்பிள்ளை நின்ற நிலையில், அந்த அறையின் கதவை வெளியே நின்றிந்த உறவினர்கள் தொடர்ச்சியாக தட்டிக்கொண்டே இருந்ததால், அவரும் வேறு வழியின்றி கதவை திறந்து உள்ளார்.

அப்போது, கதவை திறந்த வேகத்தில் உள்ளே இருந்த அந்த மணமகன், அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடியிருக்கிறார்.

எனினும், உறவினர்கள் அந்த அறையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு உடல் முழுவதும் காயங்களுடன் அந்த மணமகள் மயங்கி கீழே கிடந்திருக்கிறார். அந்த பெண்ணைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு, அந்த பெண்ணிற்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நளினியின் பெற்றோர் அங்குள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

அந்த புகாரில், “முதலிரவின் போது, என் மகளை இயற்கைக்கு மாறாக பாலியல் உறவில் மாப்பிள்ளை துன்புறுத்தியதால், என் மகள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்திருக்கிறார் என்றும், இதனால் வெளியே இருந்த உறவினர்கள் எல்லாம் கதவை தட்டியதும், பயந்து கொண்டு அந்த மாப்பிள்ளை ராஜ்குமார், அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்” என்றும், குற்றம்சாட்டி உள்ளனர். 

அத்துடன், “எங்கள் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், மனநலம் பாதித்தவர் போல நடந்து கொண்ட மாப்பிள்ளை ராஜ்குமாரை உடனே கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தள்ள மகளிர் போலீசார், தப்பித்து ஓடிய ராஜகுமாரை பிடிக்க அவரை தீவிரமா தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையம், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment