தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக ஒருவராக திகழும் யோகி பாபு தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அருண் விஜயுடன் இணைந்து யோகி பாபு காமெடியனாக நடித்துள்ள யானை திரைப்படம் நாளை ஜூலை 1ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன், சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஷன் ஏலியன் திரைப்படமாக தயாராகியிருக்கும் அயலான், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள காஃபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் யோகிபாபு நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. 

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் முன்னணி கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு நடித்துள்ள பன்னிகுட்டி திரைப்படம் வருகிற ஜூலை 8ம் தேதி ரிலீஸாகவுள்ளது. மேலும் காசேதான் கடவுளடா, சலூன் ஆகிய திரைப்படங்களும் யோகி பாபு நடிப்பில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. 

இதனிடையே பாரிஸ் ஜெயராஜ் மற்றும் A1 திரைப்படங்களின் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் மெடிக்கல் மிராக்கில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இயக்குனர் ஜான்சன் தனது A1 ப்ரொடகக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் மெடிக்கல் மிராக்கிள் படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்நிலையில் தற்போது மெடிக்கல் மிராக்கில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள யோகிபாபு, "திறமையான நகைச்சுவை திரைக்கதை எழுத்தாளர் A1 ஜான்சன் இயக்குனருடனும் அவரது அணியினருடனும் பணியாற்றியது அற்புதமானதாக இருந்தது. இன்னும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.
 

The brillant comedy script writer A1 Johnson director🎥 has wonderful time to work with you
And to with your team
And excited to work with you more and more 🤝#medicalmiracle #yogibabu #johnson #parrisjayaraj #A1 pic.twitter.com/uyIYO1lXZf

— Yogi Babu (@iYogiBabu) June 30, 2022