குடும்ப பெண்கள், சிறுமிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு.. வீடியோ எடுத்து வைத்து ரசித்த இளைஞன் கைது!

குடும்ப பெண்கள், சிறுமிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு.. வீடியோ எடுத்து வைத்து ரசித்த இளைஞன் கைது! - Daily news

குடும்ப பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து, அதனை வீடியோ எடுத்து வைத்து ரசித்த வந்த இளைஞனை போலீசார் அதிரடியாக தட்டி தூக்கி கைது செய்து உள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள விழுதுபட்டி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான மனோஜ் என்ற பட்டதாரி இளைஞர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்து உள்ளார். 

அப்போது, மனோஜ் செல்போனை அவருடைய நண்பர் ஒருவர் வாங்கி விளையாடி இருக்கிறார். அப்போது, அந்த செல்போனில் மனோஜ் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்து உள்ளார். 

அந்த ஆபாச வீடியோவில் சிறுமிகள் மற்றும் குடும்ப பெண்களிடம் அத்து மீறி மனோஜ், பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் காட்சிகள் இருந்து உள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த நண்பர், இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்களிடம் ரகசியகமாக இந்த விசயத்தை பற்றி கூறி உள்ளார்.

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த சிறுமிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள், மனோஜின் செல்போனை பிடிங்கி பார்த்து உள்ளனர்.

அப்போது, அந்த செல்போனில் இருந்த வீடியோவைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அப்போது, அந்த செல்போனில் இருந்த வீடியோவில் கிட்டதட்ட 5 சிறுமிகளில் ஆபாச வீடியோ இருந்து உள்ளது என்றும், அதில் ஒரு சிறுமியிடம் மனோஜ் அத்து மீறி பாலியல் தொந்தரவு போன்ற செயலில் ஈடுபட்டு, அந்த சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்குள்ள பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய போலீசார், இந்த வழக்கை அரூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் காவல் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், “பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது மருத்துவ பரிசோதனையில் உண்மை என தெரிய வந்துள்ளதாக” கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மனோஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்து தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்களிடமும் அவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

ஆனால், அந்த கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் அவர்களது பெற்றோர்கள் மற்றும் அவர்களது குடும்ப பெண்கள் தற்போது வரை இது தொடர்பாக எந்த வித புகார்களும் அளிக்காத நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட மனோஜை காவலில் எடுத்து, போலீசார் இது தொடர்பாக மீண்டும்  விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த பகுதியில் உள்ள பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment