காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக முதல் முறை அஜித்குமார் உடன் இணைந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். வளைகாப்புடன் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் AK62 திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

துணிவு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு விரைவில் AK62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் தேசிய விருது பெற்ற விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் அவர்கள் தொகுத்து வழங்கிய தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், ஹலிதா சமீம் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள், “முன்பெல்லாம் நடிகர்கள் தான் ஸ்டார்களாக இருக்க வேண்டும் என இருந்ததல்லவா., ஆனால் இனிமேல் எப்படி இருக்க போகிறது என்றால், ஒரு நடிகர் ஸ்டாராக இருக்கலாம். ஒரு இயக்குனர் ஸ்டாராக இருப்பார். ஒரு இசையமைப்பாளர் ஸ்டாராக இருப்பார்... ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் SS.ராஜமௌலி சார் ஸ்டார் என நாம் சொல்லவில்லை. ஆனால் இப்போது அவர் ஒரு ஸ்டார். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத் ஒரு ஸ்டார்.  ஏன் ஹீரோக்கள் மட்டுமே ஸ்டார-ஆக இருக்க வேண்டும். இனி இயக்குனர்கள் கூட ரசிகர்களை ஈர்ப்பார்கள். இப்போது பிரதீப் ரங்கநாதனை சொன்னது போல் ஒரு திரைப்படத்தின் கன்டென்ட் தான் படத்தை பார்க்க ரசிகர்களை ஈர்க்கிறது. இப்போது பிரதீப் ரங்கநாதனையை பார்த்ததும் திரையில் ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது கே ஜி எஃப்-ஐ எடுத்துக் கொண்டால் ஐந்து வருடங்களுக்கு முன்பு நாம் யஷ்-ஐ பார்த்து இருக்கிறோம். இப்போது எப்படி முன் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது பிரசாந்த் நீல் ஒரு ஸ்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு ஸ்டார்!!” என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசியமான தகவல்கள் நிறைந்த கலாட்டா பிளஸ் தமிழ் சினிமா ROUND TABLE 2022 முழு வீடியோ இதோ…