தன்னிகரற்ற நடிகராக உயர்ந்து வரும் நடிகர் தனுஷ் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்ளுரி இயக்கத்தில் நடித்துள்ள வாத்தி(SIR) திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முன்னதாக தனுஷ் நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

அந்த வகையில் ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தொடர்ந்து முன்னணி தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

கோலிவுட் மட்டுமல்லாது தற்போது டோலிவுட்டிலும் களமிறங்கியுள்ள நடிகர் தனுஷ் ஏற்கனவே பாலிவுட் - ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அந்த வகையில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் இந்த ஆண்டு(2022) வெளிவந்த தி க்ரே மேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மிரட்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் மக்களின் மனம் கவர்ந்த நடிகரான கிரிஸ் எவன்ஸ் மற்றும் முன்னணி ஹாலிவுட் நடிகர் ரியன் காஸ்லிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தி க்ரே மேன் படத்தில் மிக முக்கிய வேடத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்த தனுஷ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

தி க்ரே மேன் திரைப்படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நெட்ஃபிலிக்ஸின் மிகவும் பாப்புலரான திரைப்படமாக ரிலீஸ் ஆகிய 28 நாட்களுக்குள் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் தி க்ரே மேன் திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
dhanush in the gray man movie made new record on netflix