தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் AK62 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்த துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே நமது கலாட்டா ப்ளஸ் சேனலின் தமிழ் சினிமா 2022 ROUND TABLE நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன் AK62 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தேசிய விருது பெற்ற சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த ROUND TABLE நிகழ்ச்சியில், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், லலிதா ஷமீம் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசுகையில், “மாஸ்டர் திரைப்படத்தின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 50-50 என்று ஒரு நிலை இருந்ததாக சொன்னார். உங்களுக்கு அஜித் குமாரின் AK62 எப்படி உருவாகிறது..? என கேட்டபோது, “லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு தனி ஸ்டைல் இருக்கிறது. ஒரு ஆக்சன் படம் எடுக்கும் இயக்குனர் எளிதில் ஒரு ஸ்டாருடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும். நான் அப்படி தான் பார்க்கிறேன். ஆனால் நான் ஆக்சன் திரைப்படங்கள் எடுத்ததில்லை. என்னுடைய புரிதலும் நான் செய்த திரைப்படங்களும் வேறு ஒரு தளத்தில் இருக்கும். இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரி ஒரு கதையே ஒரு ஸ்டாரிடம் சென்று சொல்லும்போது அந்த ஸ்டார் நான் எப்படி இரண்டு பேரை காதலிப்பது என்று கேட்டாலே அது அங்கேயே முடிந்து விடும். எனவே இந்த குறிப்பிட்ட (AK62) திரைப்படத்தில் எனக்கு நான் வேண்டியதை செய்து கொள்ள எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. என்னிடம் முதல் முதலில் சொல்லும்போதே நீங்கள் உங்களுடைய படம் பண்ணுங்கள். அவ்வளவுதான் நீங்கள் ஃப்ரீயாக, உங்களது படத்தை எடுங்கள் என செல்லப்பட்டது. எனவே எனக்கு எந்த பிரஷரும் இல்லை, எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே நான் ஒரு நல்ல படத்தை கொடுப்பேன் என நம்புகிறேன்” என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ட்ரெண்டாகும் கலாட்டா ப்ளஸ் தமிழ் சினிமா 2022 ROUND TABLE முழு வீடியோ இதோ…