எல்லா தரப்பு ரசிகர்களின் இதயங்களையும் கவரும் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியிடாக ரிலீஸாக இருக்கும் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அதே பொங்கல் வெளியீடாக அஜித் குமாரின் துணிவு படமும் ரிலீஸாக இருப்பதால் இன்னும் உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இது தவிர இன்னும் பெரிய விருந்தாக எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகளும் வாரிசு ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதால் வேற லெவல் வெயிட்டிங்கில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.

முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காணக் கிடைக்காத தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி நடந்து முடிந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது. வழக்கத்தை விட இன்னும் கூலாக ஸ்டைலாக தளபதி விஜய் பேசிய விதமும் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த விதமும் இசை வெளியீட்டு விழா அரங்கை அதிர வைத்தது.

இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்களில் ஒருவராக உள்ளே நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தளபதி விஜயை நெருங்கி செல்ஃபி எடுத்த தீவிர ரசிகர் விக்கி என்ற நபர் விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய பவுன்சர்களால் விக்கி தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், நமது கலாட்டா சேனலுக்கு அழைத்த பிரத்யேக பேட்டியில் இது குறித்து விக்கி விளக்கமளித்துள்ளார்.

அந்த வகையில் பேசும் போது, “சமைப்பதற்கு வெங்காயம் எடுத்துச் சென்ற வண்டியின் ஓரமாக ஒழிந்தபடியே நகர்ந்து உள்ளே சென்றுவிட்டேன். அங்கே ஒரு இடத்தில் பவுன்சர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. என்னிடம் பவுன்சர்களுக்கான அடையாள அட்டை இல்லாமல் இருந்ததால், உணவை விட அதுவே முக்கியமானது என அதற்காக அலைந்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு பவுன்சர் அண்ணா என்னை பார்த்து உன்னிடம் இன்னும் அடையாள அட்டை கொடுக்கவில்லையா என அவர் அடையாள அட்டை கொடுத்ததை கும்பிடு போட்டு வாங்கிக் கொண்டேன். பின்னர் ஒரு வழியாக தளபதியின் மிக நெருக்கத்தில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனாலும் பழக்க தோஷத்தில் ஒரு கட்டத்தில் என்னை மீறி தலைவா என நான் கத்தியதும் மற்ற பவுன்சர்கள் நீ எதற்காக இங்கே வந்தாய் எனக்கேட்டு என்னை கொஞ்சம் பின்னால் நிற்க வைத்தார்கள்... இருப்பினும் ஒரு வழியாக மீண்டும் முன்னால் வந்து நின்று தளபதி விஜய் அவர்களை மிக நெருக்கத்தில் கண்டேன்... பின்னர் ஒவ்வொருவராக மேடையில் பேசிக் கொண்டிருந்த போது ஷாம் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு இரண்டு மன நிலைகள் ஏற்பட்டன. ஒன்று இப்படியே இருந்து அனைத்தையும் கேட்டுவிட்டு அவரைப் பார்த்த சந்தோஷத்தோடு போவதா..? அல்லது கொஞ்சம் ரிஸ்க் எடுத்து அவரது அருகில் சென்று ஒரு செல்ஃபி எடுத்து விடலாமா..? என ஒரே குழப்பத்தில் இருந்தேன். ஆனால் கட்டாயமாக ஒன்று மட்டும் என் மனதில் தோன்றியது. அவர் அருகில் சென்று விட்டால் கட்டாயமாக செல்ஃபி எடுக்க தளபதி அவர்கள் சம்மதித்து விடுவார் என எனக்கு  தெரியும். எனவே பத்திலிருந்து ஒன்று வரை எனக்குள் நானே ஒரு COUNTDOWN சொல்லிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து, தளபதி விஜயை நெருங்கினேன். அருகில் சென்றதும் அவர் என் மீது கை வைத்தவுடன் அப்படியே உருகி விட்டேன். பின்னர் பவுன்சர்கள் வந்தவுடன் தளபதி விஜய் அவர்களை தடுத்து கைக்காட்டினார். பின்னர் செல்ஃபியை எடுத்தேன் அடுத்த நொடி அவரை திரும்பி பார்க்க கூட முடியவில்லை. அதற்குள் என்னை இழுத்துச் சென்று விட்டார்கள். ஆனால் வெளியில் பேசும்படி அவர்கள் என்னை அடிக்கவோ தாக்கவோ இல்லை. அவர்களது கடமையை தான் செய்தார்கள் அவர்கள் பாதுகாப்பிற்கு தானே இருக்கிறார்கள். அதை தாண்டி வந்ததை தான் கேட்டார்கள். பின்னர் பவுன்சர்களுக்கு மேல் இருக்கும் கார்ட் வந்தார்கள். அவர்கள் என்னை விட்டு விட சொன்னார்கள். உடனே அங்கிருந்து ஓடி விட்டேன். இருந்தாலும் மேடையில் தளபதியின் குட்டி ஸ்டோரியை கேட்க முடியாமல் அவர் முத்தம் கொடுத்ததை பார்க்க முடியாமல் மிஸ் செய்து விட்டேன்” என விக்கி தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட விக்கியின் முழு பேட்டி இதோ…