தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலாஜி மோகன் நடிகை தனியா பாலகிருஷ்ணனை கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய பாலாஜி மோகன் தொடர்ந்து வாயை மூடி பேசவும் படத்தை இயக்கினார்.

இதனை அடுத்து நடிகர் தனுஷ் உடன் இணைந்த பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த மாரி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து மாரி 2 திரைப்படமும் வெளியானது. திரைப்படங்கள் மட்டுமல்லாது As I'm Suffering from காதல் வெப்சீரிஸை இயக்கிய பாலாஜி மோகன் இந்த ஆண்டு(2022) அமேசானில் வெளிவந்த புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜி திரைப்படத்தில் முக கவசம் முத்தம் எனும் எபிசோடை இயக்கினார்.

மேலும் தயாரிப்பாளராக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த மண்டேலா படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவரது காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தொடர்ந்து இயக்குனர் அட்லீயின் ராஜா ராணி படத்தில் முக்கிய பாடத்தில் நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தன்யா பாலகிருஷ்ணன், இயக்குனர் பாலாஜி மோகனின் As I'm Suffering from காதல் வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். இதனிடையே தான்யா பாலகிருஷ்ணனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பாலாஜி மோகன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது நடிகை தனியா பாலகிருஷ்ணன் நடித்துவரும் தெலுங்கு திரைப்படங்களின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் நிறைய படங்களில் நடிக்க வேண்டாம் என்றும் இயக்குனர் பாலாஜி மோகன் தடை போடுவதாக பிரபல தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் பாலாஜி மோகன் தன்மீது தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவதாக நடிகை கல்பிகா கணேஷ் மீது அவதூறு புகார் அளித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். இது குறித்த இதர தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.