தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரசுடு என வெளியாகிறது. தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர்  வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இந்த முறையும் தளபதி விஜயின் குட்டி ஸ்டோரியும் அவரது பேச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்து கிளம்பிய நடிகை ராஷ்மிகாவின் காரை ரசிகர்கள் பின் தொடர்ந்து துரத்தி சென்றுள்ளனர். இதனை கவனித்த நடிகை ராஷ்மிகா தனது காரை நிறுத்தி, விரட்டி வந்த ரசிகர்களை ஹெல்மெட் போடும்படி எச்சரித்துள்ளார். “இப்போதே ஹெல்மெட் போடுங்கள்” என கோபமாக சொல்லிவிட்டு ராஷ்மிகா கிளம்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…