தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக அடுத்தடுத்து பிளாட்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த பிளாக்பஸ்டராக வெளிவரவுள்ளது வாரிசு திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தின் விஜய் நடிக்கிறார். விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 67 திரைப்படம் ஒட்டு மொத்த எண்ணிக்கை சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. தளபதி விஜயுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை த்ரிஷா, தளபதி 67 படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு தளபதி 67 திரைப்படத்தின் அடுத்தடுத்த அட்டகாசமான அறிவிப்புகள் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், தற்போது நமது கலாட்டா பிளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா 2022 ROUND TABLE நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் 67 படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த ROUND TABLE நிகழ்ச்சியில், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், லலிதா ஷமீம் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை பார்த்து “நான் இவரது படத்தில் இருக்கிறேன்” என தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். தொடர்ந்து, "நான் (லோகேஷ் கனகராஜ்) இவரை பார்த்தேன் தலையசைத்தார். எனவே அதை உறுதியாக சொல்லி விட்டேன்” என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட பிரத்தியேகமான கலாட்டா பிளஸ் ROUND TABLE நிகழ்ச்சியின் முழு வீடியோ இதோ…