தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விமல் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த விலங்கு வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து விமல் நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் விமல் நடிப்பில் தயாராகியுள்ள சண்டைக்காரி திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய திரைப்படங்களில் நடிகர் விமல் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக விமல் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் துடிக்கும் கரங்கள். இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் சதீஷ் மற்றும் சௌந்தர ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒடியன் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் துடிக்கும் கரங்கள் திரைப்படத்திற்கு ரம்மி ஒளிப்பதிவு செய்ய, ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் துடிக்கும் கரங்கள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விமலின் துடிக்கும் கரங்கள் ஃபர்ஸ்ட் லுக் இதோ…
 

Happy to launch #ThudikkumKarangal first look poster 💥

All the best @ActorVemal & team.@actorsathish @NarangMisha @Dir_Veludoss @soundar4uall @Ramydop @editorkishore @dinesh_dance @Viveka_Lyrics @sureshmenonnew @AnanthNag24 @sparrowjai @AnanyaMani @KskSelvaPro pic.twitter.com/gDpZspzFdC

— G.V.Prakash Kumar (@gvprakash) June 27, 2022