தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் நல்ல நடிகராகவும் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பார்த்திபன், சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான சுழல் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் சின்ன பழுவேட்டரையர் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்களாக வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உலக சாதனை முயற்சியாக வெளிவரவுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் & அகிரா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie)  திரைப்படமாக உருவாகியுள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இரவின் நிழல் திரைப்படத்தில் பணியாற்றி உள்ளனர். 

இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் இரவு நிழல் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்தர்.A.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். V க்ரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.S.தாணு அவர்கள் வெளியிட கடந்த ஜூன் 24ம் தேதி இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 15ஆம் தேதி இரவு நிழல் திரைப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

All the best to the team

#இரவின்நிழல் @arrahman @rparthiban @theVcreations @iravin_nizhal @musicondhwani @ArthurWisonA @RVijaimurugan @GenauRanjith @k33rthana @raakiparthepan @wired__ @onlynikil @divomovies @mirchitamil pic.twitter.com/TEB9C6bY0O

— Dhanush (@dhanushkraja) June 27, 2022