திடீரென சீரியல் இருந்து விலகிய சன் டிவியின் முன்னணி நடிகர் !
By Aravind Selvam | Galatta | June 27, 2022 18:26 PM IST
சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,அக்ஷயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ஆதரவோடு அமோக வரவேற்பை பெற்று சன் டிவியின் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றாக அசத்தி வருகிறது.
சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளியாக அசத்திய அக்ஷயா இந்த தொடரில் வில்லியாக நடித்து அசத்தி வருகிறார்.பல திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை படைத்துள்ளது.
தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரியலின் நாயகன் சிபு சூரியன் இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.இவரது எபிசோடுகள் ஆகஸ்ட் வரை வரும் என்று தெரிவித்துள்ளார்.இவரது திடீர் விலகல் ரசிகர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.புது ஹீரோவாக யார் வரப்போகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.