அமர்க்களமாக ரெடி ஆகும் கோப்ரா...ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | June 27, 2022 20:12 PM IST
A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச்செய்தது.சீயான் விக்ரம் பல வித்தியாச கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்த இந்த டீஸர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வந்தது.
கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.பிரம்மாண்டமாக ரிலீசுக்கு ரெடி ஆகி வரும் இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#Cobra gets bigger !
— Seven Screen Studio (@7screenstudio) June 27, 2022
It's '#Lalitkumar & #UdhayanidhiStalin' presents #ChiyaanVikram's #Cobra ! #CobraFromAugust11
Excited to associate with @Udhaystalin Sir & @RedGiantMovies_#CobraWithRedGiantMovies
An @AjayGnanamuthu Film 🎬
An @arrahman Musical 🥁@SonyMusicSouth pic.twitter.com/otUZWg9bw9