இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து கோவா, மங்காத்தா, டமால்-டுமீல், கப்பல், சென்னை 600028 பார்ட் 2, மேயாத மான், சிக்ஸர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் வைபவ்.

தொடர்ந்து ஆலம்பனா மற்றும் பபூன் என அடுத்தடுத்து வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக கலகலப்பான ஹாரர் காமெடி எண்டர்டெயினர் திரைப்படமாக வைபவ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காட்டேரி.

யாமிருக்க பயமே & கவலை வேண்டாம் படங்களின் இயக்குனர் டீகே இயக்கத்தில் வைபவ் உடன் வரலக்ஷ்மி சரத்குமார்,சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் காட்டேரி திரைப்படத்தில் பொன்னம்பலம், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளுசபா மனோகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

P.S.வினோத் ஒளிப்பதிவில் காட்டேரி படத்திற்கு S.N.பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் காட்டேரி திரைப்படம்  சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் காட்டேரி திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

The spooky brand new #Katteri promo is herehttps://t.co/OtQKIaEYtj#KatteriFeast #KatteriFeastFromAug5@StudioGreen2 @kegvraja @abiabipictures @abineshelango @SakthiFilmFctry @actor_vaibhav #Deekay @NehaGnanavel @Dhananjayang @thinkmusicindia @digitallynow pic.twitter.com/ADU76zrc4b

— Yuvraaj (@proyuvraaj) August 2, 2022