இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரபலமடைந்து தொடர்ந்து சுப்ரமணியபுரம் கோவா எங்கேயும் எப்போதும் ராஜா ராணி வடகறி திருமணம் என்னும் நிக்கா பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடிச்சது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் ஜெய்.

முன்னதாக இந்த ஆண்டில்(2022) நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே & பட்டாம்பூச்சி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, காஃபி வித் காதல் & பிரேக்கிங் நியூஸ் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் ஜெய் நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் எண்ணித்துணிக. இயக்குனர் S.K.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெயுடன் இணைந்து எண்ணித்துணிக திரைப்படத்தில் அதுல்யா ரவி, வித்யா பிரதீப், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, KPY குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Rain Of Arrows தயாரிப்பில் Krikes Cine Creations வழங்கும் எண்ணித்துணிக திரைப்படத்தை MSM MOVIE TRADERS வெளியீட வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. J.B.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் V.J.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ள எண்ணித்துணிக திரைப்படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார். இந்நிலையில் எண்ணித்துணிக திரைப்படத்திலிருந்து ஏனடி பெண்ணே வீடியோ பாடல் வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…