இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. தொடர்ந்து த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜீவி படத்திற்கு பின் நடிகர் வெற்றி தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

வித்தியாசமான த்ரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வெற்றி நடிப்பில் கடந்த ஆண்டு(2021) ரிலீசான வனம் திரைப்படம் மிஸ்ட்ரி த்ரில்லர் படமாக நல்ல வரவேற்ப்பை பெற்றதையடுத்து, நடிகர் வெற்றி மற்றும் நடிகை ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்த ஜோதி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸானது. 

மேலும் மெமரிஸ், கண்ணகி, ரெட் சாண்டல் மற்றும் பம்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் வெற்றி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் VJ கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜீவி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி 2 படம் தயாராகியுள்ளது. 

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் VJ.கோபிநாத் இயக்கத்தில் தயாராகும் ஜீவி 2 படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். வெற்றியுடன் இணைந்து கருணாகரன், ரோகினி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீவி 2 படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். 

முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ஜீவி 2 படத்தை தயாரித்துள்ளார்.  ஜீவி 2 படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. ஜீவி 2 படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபல OTT தளங்களில் ஒன்றான Aha தமிழ் தளத்தில் விரைவில் ஜீவி 2 திரைப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

1 mudinja idathula irunthe.. 2 aarambam aaguthu!⚡

Happy to present the sequel to the critically acclaimed Tamil thriller #Jiivi - #Jiivi2OnAHA!@Vjgopinath1 @act_vetri @sureshkamatchi @pravethedop @SundaramurthyKS @Cinemainmygenes @Ashwini_chandr @Rohinimolleti @mimegopi pic.twitter.com/jpzlgevXKb

— venkat prabhu (@vp_offl) August 2, 2022