உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக நீண்ட இடைவெளிக்கு பின், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் ரிலீஸான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது 

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நல்ல ஆக்ஷன் படமாக திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் அனுபவத்தை கொடுத்த விக்ரம் திரைப்படம் தமிழக பாக்ஸ் ஆபீஸில் ஆல் டைம் ரெக்கார்ட்டாக வசூல் சாதனை படைத்துள்ளது. 

விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாஸில், நரேன், செம்பன் வினோத், ஜாபர், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.க்ளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் அந்த சிறிய நேரத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா மிரட்டினார். 

விக்ரம் திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்திலிருந்து எமோஷ்னலான போர்க் கண்ட சிங்கம் வீடியோ பாடல் வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…