இந்திய திரை உலகமே வியந்து பார்க்கும் ஈடு இணையற்ற கலைஞனாக தொடர்ந்து தரமான படைப்புகளை ரசிகர்களுக்காக வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டராகி ஆல் டைம் ரெகார்டாக வசூலில் சாதனை படைத்தது. அடுத்ததாக நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புதிய படத்தில் மணிரத்னத்துடன் இணைகிறார் கமல்ஹாசன்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் தனது 234வது படமாக தயாராகும் KH234 படத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க, இசைப்புயல் ஏவும்.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகிறார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று டிசம்பர் 15ஆம் தேதி படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் இருந்து புதிய புகைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.” என தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த பதிவு & புகைப்படம் இதோ…

 

25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள். pic.twitter.com/tLbjpw2MjE

— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2022