சிறந்த நடிகராக தளபதி விஜய்.. ‘மாஸ்டர்’ முதல் ‘மாநாடு’ வரை சர்வதேச ஒசாகா விருது வென்ற திரைப்படங்கள் – முழு பட்டியல் இதோ..

சிறந்த தமிழ் நடிகருக்கான ஒசாகா விருது வென்ற தளபதி விஜய் Thalapathy Vijay wins best actor award at osaka | Galatta

செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் ஆயுத பூஜை பண்டிகை வெளியீடாக லியோ திரைப்படம் உலகமெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஜப்பான் சர்வதேச விருது விழாவில் தளபதி விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிகப்படுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜப்பான் நாட்டின் சார்பாக சர்வதேச அளவில் விருது விழா நடைபெறும். அதன்படி ஒசாகா தமிழ் தேசிய விருது விழா 2021 ஆண்டு வெளியான படங்களுக்கு பல்வேறு பட்டியல்களின் அடிப்படையில் விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த 2021 ம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்காக தளபதி விஜய் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்பையடுத்து இந்த விருது அறிவிப்பு விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் மிகப்பெரிய அளவு வைரலாக்கி வருகின்றனர்.

 

#OTIFF2021 Best Actor Award Proudly presented to #Thalapathy @actorvijay For #Master @Dir_Lokesh @VijaySethuOffl @iam_arjundas @Jagadishbliss pic.twitter.com/xxrGyTjTnm

— Osaka Tamil International Film Festival (@osaka_tamil) May 21, 2023

மேலும் இந்த விருதையடுத்து தமிழிலில் கடந்த 2021 ல் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சிறந்த திரைப்படம் 2021, சிறந்த இயக்குனர், சிறந்த கலை இயக்கம் என்ற பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.பின் சிறந்த நடிகைக்கான விருதினை தலைவி திரைப்படத்திற்காக கங்கனா ரனாவத், சிறந்தா இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா மாநாடு திரைபடத்திற்காகவும் சிறந்த ஒளிப்பதிவாளராக தேனீ ஈஸ்வர் கர்ணன் திரைப்படதிற்காகவும் வென்றுள்ளனர்.  மேலும் தொடர்ந்து சிறந்த திரைக்கதை வெங்கட் பிரபு மாநாடு திரைப்படதிற்காகவும்  வென்றுள்ளனர்.

அதை தொடர்ந்து

சிறந்த தயாரிப்பு நிறுவனம் : மண்டேலா

சிறந்த நடனம் :  மாஸ்டர்

சிறந்த துணை நடிகர் : மணிகண்டன் (ஜெய் பீம்)

சிறந்த துணை நடிகை : லிஜோ மோல் (ஜெய் பீம்)

சிறந்த காமெடியன் : ரெடின் கிங்க்ஸ்லி (டாக்டர்)

சிறந்த வில்லன் : விஜய் சேதுபதி (மாஸ்டர்)

சிறந்த சண்டை வடிவமைப்பு : சுல்தான்

சிறந்த VFK :  டெடி

சிறந்த கூர்ந்து கவனிக்கபட்ட திரைப்படம் : மண்டேலா

 இந்த அறிவிப்பையடுத்து திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

#OTIFF2021 Awardees List 💐@ThanthiTV @TamilTheHindu @PTTVOnlineNews @SunTV @KskSelvaPRO @Rajini_Japan @SureshDaina pic.twitter.com/fWUMwUgcbW

— Osaka Tamil International Film Festival (@osaka_tamil) May 21, 2023

தளபதிக்கு செய்து கொடுத்த Promise.. 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

தளபதிக்கு செய்து கொடுத்த Promise.. 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

‘தளபதி 68’ குறித்து அன்றே கணித்த அல்போன்ஸ் புத்திரன்..! இணையத்தில் வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு – விவரம் இதோ..
சினிமா

‘தளபதி 68’ குறித்து அன்றே கணித்த அல்போன்ஸ் புத்திரன்..! இணையத்தில் வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு – விவரம் இதோ..

கடும் கோபத்தில் நடிகை வேதிகா.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.. பின்னணி இதோ..
சினிமா

கடும் கோபத்தில் நடிகை வேதிகா.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.. பின்னணி இதோ..