தளபதிக்கு செய்து கொடுத்த Promise.. 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

தளபதி விஜய் குறித்து வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல் வைரல் பதிவு இதோ – Venkat prabhu about Thalapathy Vijay | Galatta

இந்திய சினிமா எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி விஜயின் லியோ படம் இருந்து வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 68 வது திரைப்படம் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அறிவிப்பின் படி தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் 25 படமாக  தளபதி 68’ என்ற பெயரில் தளபதியின் 68 வது திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்  மேலும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள்ளார். இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பகிரப்பட்டு தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் வெங்கட் பிரபு தளபதி விஜயின் புது விதமான கூட்டணியை திரையுலகமே வரவேற்று படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். வெங்கட் பிரபு எடுத்தாலே அது பக்கா கமர்ஷியல் ஹிட்டாகும் என்ற நேர்மறையான கருத்துகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது இஸ்டாகிராம் பக்கத்தில் விஜயுடன் நடந்த சந்திப்பின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன், “உங்கள் நம்பிக்கைக்கு நன்றி அண்ணா.. நான் உங்களுக்கு இந்த புகைப்படத்தை பட அறிவிப்பிற்கு பின்பு பதிவிடுவேன் என்று அளித்த சத்தியத்தை கடைபிடித்து விட்டேன் .. (இந்த புகைப்படம் 10 மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது) தளபதி 68 என்ற கனவு நிஜமாகிவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ,மேலும் தற்போது வெங்கட் பிரபு அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

 

View this post on Instagram

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

10 மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதால் லியோ படத்திற்காக தளபதி விஜய் தயாராகி கொண்டிருந்த நேரம் என்றும் அப்போதிலிருந்தே தனது அடுத்த படம் குறித்த கதையை கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் காமெடி கமர்ஷியல் மற்றும் பக்கா ஆக்ஷன் திரைபாடங்களுக்கு புகழ் பெற்றவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அதன்படி அவருடைய திரைப்படங்கள் மெகா ஹிட்டாகவே அமைந்துள்ளது. அதன்படி திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்திருப்பது திரையுலகில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்த்துள்ளது.

காணமல் போன சுனைனா.! படக்குழுவினர் மீது கொதித்தெழுந்த ரசிகர்கள்..  - சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.. பின்னணி இதோ..
சினிமா

காணமல் போன சுனைனா.! படக்குழுவினர் மீது கொதித்தெழுந்த ரசிகர்கள்.. - சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.. பின்னணி இதோ..

ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்.. காமெடியில் கலக்கும் யோகிபாபு.. -  வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ரசிகர்களால் வைரல்..
சினிமா

ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்.. காமெடியில் கலக்கும் யோகிபாபு.. - வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ரசிகர்களால் வைரல்..

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் ஹிப் ஹாப் ஆதி..  வெளியானது ‘வீரன்’ பட டிரைலர் – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் ஹிப் ஹாப் ஆதி.. வெளியானது ‘வீரன்’ பட டிரைலர் – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..