உலகநாயகன் கமல்ஹாசன்-சிலம்பரசன்TR-தேசிங்கு பெரியசாமி அதிரடி கூட்டணியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!

சிலம்பரசன்TR தேசிங் பெரியசாமியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்,silamabarasan tr kamal haasan desingh periyasamy in str48 pre production begins | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராக இருக்கும் சிலம்பரசன்TRன் STR48 படத்தின் முதற்கட்ட வேலைகள் தற்போது தொடங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் R.மகேந்திரன் அவர்கள் கூட்டணியில் தயாராகும் இத்திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. முன்னதாக ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நடிகர் சிலம்பரசன்TRன் திரைப்பயணம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அத்தனை விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி வெற்றிப் பாதையில் வீரநடை போட்டு வருகிறது. குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்த மாநாடு திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியும் சிலம்பரசன்.TRன் புதிய லுக்கும் இந்த வெற்றிப் பயணத்திற்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்த சிலம்பரசன்.TR 18 வயது இளைஞனுக்கான தோற்றத்திற்காக உடல் எடையை இன்னும் குறைத்து அந்த "முத்து" என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து கமர்சியல் ஹீரோ என்பதையும் தாண்டி சிறந்த நடிகராக மக்கள் மனதை வென்றார். இந்த வரிசையில் அடுத்தடுத்து சிலம்பரசன்TR நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் வெளிவந்த அறிவிப்புதான் STR48.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் இரண்டாவது படமாக உருவாகும் STR48 திரைப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 56வது படமாகும். வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் STR48 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சிலம்பரசனின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட திரைப்படமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்செலவில் STR48 திரைப்படம் தயாராக இருக்கிறது. சிலம்பரசனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் ஒரு படமாக STR48 திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தனது லுக்கிலிருந்து படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களுக்காகவும் நடிகராக தன்னை முழு ஈடுபாட்டுடன் சிலம்பரசன்.TR அர்ப்பணித்து வருகிறார். அதிரடியான வரலாற்று கதை களத்தைக் கொண்ட பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தின் போர் காட்சிகளுக்காகவும் சண்டை காட்சிகளுக்காகவும் தாய்லாந்தில் தங்கி இருந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளை சிலம்பரசன்.TR மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய கதை தான் தற்போது சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடிக்கிற இந்த STR48 திரைப்படம் என்றும் எனவே அதற்காக சிறு மாறுதல்கள் இக்கதையில் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் STR48 திரைப்படத்திற்கான முதற்கட்ட ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் சிலம்பரசன்.TR மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருவரும் உலகநாயகன் கமல்ஹாசனோடு இருக்கும் இருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

#BloodAndBattle Rages! 🔥#STR48 #Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #RKFI56_STR48 #BLOODandBATTLE https://t.co/cnd8NugYPd

— Silambarasan TR (@SilambarasanTR_) May 22, 2023

இறுதி கட்டத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... ரிலீஸ் குறித்த அதிரடியான முக்கிய அறிவிப்பு இதோ!
சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... ரிலீஸ் குறித்த அதிரடியான முக்கிய அறிவிப்பு இதோ!

சினிமா

"முன்னணி நட்சத்திர நடிகருக்காக பின்னணி குரல் கொடுத்த கார்த்தி!"- ரசிகர்களை உற்சாகபடுத்திய வீடியோ இதோ!

பூஜை உடன் புதிய படத்தை தொடங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி... மீண்டும் இணையும் சுவாரசியமான கூட்டணி! விவரம் இதோ
சினிமா

பூஜை உடன் புதிய படத்தை தொடங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி... மீண்டும் இணையும் சுவாரசியமான கூட்டணி! விவரம் இதோ