மோகன் லால் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய ஜெயிலர் பட இயக்குனர் – வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..

ஜெயிலர் படப்பிடிப்பு புகைப்படத்துடன் மோகன் லால் பிறந்த நாள் வாழ்த்து கூறிய இயக்குனர் நெல்சன் - Jailer Director Nelson wishes to Mohan lal | Galatta

இந்தியாவின் ஆகச்சிறந்த நடிகராகவும் தனித்துவமான பங்களிப்பை நடிப்பில் வழங்கி முன்னணி நடிகராக வலம் வருபவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால். மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தமிழில் இதுவரை இருவர், சிறைச்சாலை, உன்னை போல் ஒருவன். காப்பான், ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மோகன் லால் மலையாள திரையுலகில் ‘மலைகோட்டை வாலிபன்’ என்ற படத்திலும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் திரைப்படதில் மிக முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அவரது 63 வது பிறந்தநாள் ரசிகர்களாலும் திரையுலகினராலும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அவரது மலைகோட்டை வாலிபன் படக்குழு சார்பில் அட்டகாசமான காட்சி வெளியிடப்பட்டது அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படமான ஜெயிலர் படப்பிடிப்பில் மோகன் லால் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் இயக்குனர் நெல்சன் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

thalapathy 68 director venkat prabhu shared photo with thalapathy vijay

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன் லால், சிவ ராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், கிஷோர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.   இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சூப்பர் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகமெங்கும் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Happiest birthday to the coolest and ever charming @Mohanlal sir 💐💐❤️🤗 #Lalettan #Jailer pic.twitter.com/H3KN2yupub

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) May 21, 2023

கடும் கோபத்தில் நடிகை வேதிகா.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.. பின்னணி இதோ..
சினிமா

கடும் கோபத்தில் நடிகை வேதிகா.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.. பின்னணி இதோ..

காணமல் போன சுனைனா.! படக்குழுவினர் மீது கொதித்தெழுந்த ரசிகர்கள்..  - சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.. பின்னணி இதோ..
சினிமா

காணமல் போன சுனைனா.! படக்குழுவினர் மீது கொதித்தெழுந்த ரசிகர்கள்.. - சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.. பின்னணி இதோ..

ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்.. காமெடியில் கலக்கும் யோகிபாபு.. -  வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ரசிகர்களால் வைரல்..
சினிமா

ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்.. காமெடியில் கலக்கும் யோகிபாபு.. - வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ரசிகர்களால் வைரல்..