‘விடாமுயற்சி’ படம் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் குமார் போட்ட திட்டம்.. –இணையத்தில் வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு இதோ..

மோட்டார் சைக்கிள் பயண நிறுவனத்தை தொடங்கிய அஜித் குமார் விவரம் இதோ -  Ajith kumar starts motor cycle tour company | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் நடிப்பில் இறந்த ஆண்டு துணிவு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை உலகளவில் பெற்று தந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் துணிவு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து அஜித் குமாரின் 62 திரைப்படத்தை இயக்குவது குறித்த பேச்சு இணையத்தில் வைரலானது.  அதன்படி லைகா தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார் என்ற தகவல் படத்தின் டைட்டில் ‘விடாமுயற்சி’ என்ற அப்டேட்டுடன் வெளியானது.

இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த அறிவிப்பை கொண்டாடி இணையத்தில் வைரலாக்கினார். அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின்  முன் தயாரிப்பு பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்க அஜித் குமார் தனது வாழ்நாள் ஆசையான ‘பரஸ்பர மரியாதைக்கான பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் பைக் பயணம் மேற்க்கொள்ளும் திட்டத்தில் இயங்கி வந்தார். அதன்படி நேபாளம் பகுதியில் அஜித்குமார் தனது பைக் பயணத்தில் இருந்து தற்போது அந்த பகுதியை முடித்துள்ளார். விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் குமார் கலந்து கொள்வார்.

இந்நிலையில்  அஜித் குமார் அட்டகாசமான புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளார். ‘AK MOTIO RIDE’  என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)" என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன். என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிக ளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறியைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதியேக அனுபவத்தை வழங்குவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Discipline makes life easier#AKMOTORIDE pic.twitter.com/wf5kZHMVdt

— Suresh Chandra (@SureshChandraa) May 22, 2023

தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் அஜித் குமார் திரைத்துறையில் மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் தனி திறன் மிக்கவராகவும் மற்றவருக்கு உந்துதல் தரும் மனிதராகவும் இருந்து வருகிறார். அவருடைய பல்துறை திறனில் தற்போது AK MOTO RIDE இணைந்துள்ளது. இத்திட்டத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஜித் குமாரை வாழ்த்தி வருகின்றனர்.

'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’.! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..  அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’.! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த விஜய் ஆண்டனி.. முதல் நாளிலே கோடிகளை குவித்த ‘பிச்சைக்காரன் 2’ – வைரல் பதிவு இதோ..
சினிமா

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த விஜய் ஆண்டனி.. முதல் நாளிலே கோடிகளை குவித்த ‘பிச்சைக்காரன் 2’ – வைரல் பதிவு இதோ..

சினிமா

"கத்தி பேசனும் இல்லன்ன கத்தில பேசனும் " படத்தில் இயக்குனர் போட்ட கண்டிஷன்... – நடிகர் ஆர்யா பகிர்ந்த தகவல் .. முழு வீடியோ இதோ..