‘தளபதி 68’ குறித்து அன்றே கணித்த அல்போன்ஸ் புத்திரன்..! இணையத்தில் வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு – விவரம் இதோ..

தளபதி 68 படம் குறித்து பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வைரல் பதிவு இதோ - Director alphonse puthren about thalapathy 68 | Galatta

கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ படத்தில் பணியாற்றி வருகிறார். செவன் ஸ்க்ரீன் தயாரித்து வரும் இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். லியோ படத்தின் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவு வைரலானது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லியோ திரைப்படம் வரும் ஆயுத பூஜை பண்டிகை திரைப்படமாக இணையத்தில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஒரு புறம் லியோ திரைப்படம் உருவாகி வரும் நேரத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிக்கவிருக்கும் அவரது 68 வது திரைப்படம் குறித்த அப்டேட்டினை வெளியிட்டுள்ளார். அதன்படி தளபதி 68 என்ற பெயரில் உருவாகும் இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இது குறித்து வெளியான அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புது வருட ஆசை குறித்து ஜனவரி 1 அன்று பதிவிட்ட பதிவினை பகிர்ந்து தளபதி 68 திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

 

Some of my New Year Wishes are ...
1. Thalapathy Vijay and (AK) Ajith Kumar with a Suitable Actress or Actresses Directed by Venkat Prabhu, Shankar, Mani Ratnam, Karthik Subbaraj, Lokesh or Pradeep Ranganathan. (1/7)

— Alphonse​​ Puthren (@puthrenalphonse) January 1, 2023

அவரது புதுவருட நாள் பதிவில், எனது புது வருட ஆசையாக இருப்பது, தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் சரியான நடிகர்களுடன் படம் பண்ண வேண்டும் அந்த படம் வெங்கட் பிரபு,  ஷங்கர், மணிரத்தினம், லோகேஷ் கனகராஜ், பிரதீப் ரங்கநாதன், கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக இருக்க வேண்டும். மேலும் நடிகர் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் மணிரத்தினம், கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன், லோகேஷ், கௌதம் மேனன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் கமல் ஹாசன் இயக்கத்தில் நடிக்க வேண்டும். அதை தொடர்ந்து மேலும் அவரது திரையுலக கூட்டணி விருப்பம் குறித்து பகிர்ந்துள்ளார்.  இந்நிலையில் அவரது புது வருட ஆசையாக வெங்கட் பிரபு – தளபதி விஜய் கூட்டணி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்களால் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவு  வைரலாகி வருகிறது.

 

New Year Wishes ( 2023 ). 😀#Thalapathy68@vp_offl 😃❤ https://t.co/8OGtSlj3TT

— Alphonse​​ Puthren (@puthrenalphonse) May 21, 2023

முன்னதாக தளபதி விஜய் குறித்து அல்போன்ஸ் புத்திரன் “பிரேமம் வெளியான போது தமிழ் நாட்டிலிருந்து வந்த முதல் வாழ்த்து விஜய் அவர்களுடையது தான். நான் அவருடன் பேசியுள்ளேன். ஒரு முறை நேரில் சந்தித்துள்ளேன்.. நான் நம்புகிறேன் அவர் ஒருநாள் இணைந்து பணியாற்ற என்னை அழைப்பார். I’m waiting” என்று குறிப்பிட்டிருந்தார்.  

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் படம் ஒன்றை இயக்கவுள்ளார் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்.. காமெடியில் கலக்கும் யோகிபாபு.. -  வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ரசிகர்களால் வைரல்..
சினிமா

ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்.. காமெடியில் கலக்கும் யோகிபாபு.. - வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ரசிகர்களால் வைரல்..

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் ஹிப் ஹாப் ஆதி..  வெளியானது ‘வீரன்’ பட டிரைலர் – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் ஹிப் ஹாப் ஆதி.. வெளியானது ‘வீரன்’ பட டிரைலர் – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

கிரிக்கெட் கதைகளத்தில் இயக்குனர் பா ரஞ்சித்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் டைட்டில் வீடியோ இதோ..
சினிமா

கிரிக்கெட் கதைகளத்தில் இயக்குனர் பா ரஞ்சித்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் டைட்டில் வீடியோ இதோ..