“யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டிய தமிழக ஆளுநர்.. - வைரலாகும் பதிவு இதோ..

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டிய ஆளுநர் ரவி விவரம் உள்ளே – TN Governor Ravi praises The kerala story movie | Galatta

கடந்த மே மாதம் 5 ம் தேதி இயக்குனர் சுடிப்டோ சென் இயக்கத்தில் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா ஷர்மா, யோகிதா பீகாணி, சித்தி இத்தானி, தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் இந்து மத பெண்கள் இஸ்லாமியர்களால் ஏமாற்றபட்டு மதம் மாற வைத்து தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக கதைகருவை கொண்டுள்ளது. முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படத்தை தடை செய்யவும் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்றும் பல அமைப்பினர் மற்றும் பல இந்தியா முழுவதும் ஆர்பாட்டம் செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இப்படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. இருந்தும் திட்டமிட்டபடி கடந்த மே 5ம் தேதி இந்தியா முழுவதும் இப்படம் போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது.

தமிழ் நாட்டில் சில திரையரங்குகளில் மட்டுமே வெளியான இப்படம் மக்களின் வரவேற்பு இல்லை என்று ஒரே நாளில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.  திரைப்படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாக ஆகியும் இப்படத்திற்கான எதிர்ப்பும் சர்ச்சையும் இருந்து வருகிறது. தென்னிந்திய வரவேற்பை பெறவில்லை என்றாலும் வடஇந்திய மாநிலங்களில் இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கும் செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.  தற்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலகமெங்கும் ரூ200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

வங்க தேச மாநிலங்கள் மற்றும் சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து அப்படக்குழு உச்சநீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அந்த வழக்கை விசாரித்து படத்திற்கு தடை விதித்த ஆணையை ரத்து செய்து தி கேரளா ஸ்டோரி திரைபடத்தை உரிய பாதுகாப்புடன் திரையிட உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வங்க தேச மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உரிய பாதுகாப்புடன் திரையிடப்பட்டு வருகிறது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள் பலர் பிரதமர் மோடி உட்பட பலர் வரவேற்பு அளித்து வரும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்த்து அப்படம் குறித்து தனது கருத்தை ராஜ்பவன் தமிழ்நாடு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான எதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

 

“தி கேரளா ஸ்டோரி” படத்தை பார்த்தேன்.
ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.: ஆளுநர் ரவி@PMOIndia @HMOIndia @MIB_India @pibchennai @ANI @PTI_News

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 21, 2023

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த விஜய் ஆண்டனி.. முதல் நாளிலே கோடிகளை குவித்த ‘பிச்சைக்காரன் 2’ – வைரல் பதிவு இதோ..
சினிமா

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த விஜய் ஆண்டனி.. முதல் நாளிலே கோடிகளை குவித்த ‘பிச்சைக்காரன் 2’ – வைரல் பதிவு இதோ..

சினிமா

"கத்தி பேசனும் இல்லன்ன கத்தில பேசனும் " படத்தில் இயக்குனர் போட்ட கண்டிஷன்... – நடிகர் ஆர்யா பகிர்ந்த தகவல் .. முழு வீடியோ இதோ..

பழம்பெரும் நடிகை வசந்தா உடல்நல குறைவினால் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..
சினிமா

பழம்பெரும் நடிகை வசந்தா உடல்நல குறைவினால் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..