"தளபதி68-ல் விஜய் உடன் இணைகிறாரா அஜித்குமார்?"- வெங்கட் பிரபுவின் முதல் மாஸ் அப்டேட்... வைரல் வீடியோ இதோ!

தளபதி 68ல் விஜயுடன் அஜித் நடிப்பது குறித்து வெங்கட் பிரபு,Venkat prabhu about ajith kumar role with vijay in thalapathy68 movie | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் நேற்று (மே 21) வெளிவந்தது தளபதி 68 பட அதிரடி அறிவிப்பு. முதல்முறையாக தளபதி விஜய் உடன் இயக்குனர் வெங்கட் பிரபு கைகோர்த்திருக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிகில் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் நடிக்கும் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் தளபதி விஜய் இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனை அடுத்து தயாராகும் இயக்குனர் வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியின் தளபதி 68 திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டு கோடையில், விடுமுறையை கொண்டாடும் வகையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கி தொடர்ந்து கலக்கலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு, அஜித் குமாரின் 50வது படமான மங்கத்தா திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீப காலங்களில் "பார்ட் 2" படங்கள் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால் நீண்ட காலமாகவே ஒரு படத்தின் பார்ட் 2விற்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள் என்றால் அது மங்காத்தா பார்ட் 2 தான். பிளாக்பஸ்டர் ஹிட்டான மங்காத்தா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மங்காத்தா 2 படத்திற்காக ரசிகர்கள் இப்போதும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த கஸ்டடி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் உடன் இணைந்து தளபதி 68 படத்தில் அஜித்குமார் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிரபல நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான டேனியல் போப்பின் மேடை நாடக நடிப்பிற்கான சிறப்பு பயிற்சி பட்டறையை துவக்கி வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்திற்கு பிறகு வரும் என தெரிவித்தார். அதேபோல் முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தந்தை கங்கை அமரன் அவர்கள் அஜித் குமார் மற்றும் விஜய் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது குறித்து பேசியது பற்றி கேட்டபோது, “அது எனது தந்தையின் ஆசை” என தெரிவித்த, அவரிடம் “ஒருவேளை சிறப்பு தோற்றத்தில் அஜித்குமார் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?” என கேட்டபோது, “அப்படி எந்த திட்டமும் இல்லை” என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் தளபதி 68 படத்தில் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன எல்லாம் பெரிய சஸ்பென்ஸ் என வெங்கட் பிரபு தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் அந்த ஸ்பெஷல் வீடியோ இதோ…
 

'அல்லாஹ்வும் அய்யனாரும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு!'- ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட செம்ம மாஸ் ட்ரெய்லர் இதோ!
சினிமா

'அல்லாஹ்வும் அய்யனாரும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு!'- ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட செம்ம மாஸ் ட்ரெய்லர் இதோ!

இறுதி கட்டத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... ரிலீஸ் குறித்த அதிரடியான முக்கிய அறிவிப்பு இதோ!
சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... ரிலீஸ் குறித்த அதிரடியான முக்கிய அறிவிப்பு இதோ!

சினிமா

"முன்னணி நட்சத்திர நடிகருக்காக பின்னணி குரல் கொடுத்த கார்த்தி!"- ரசிகர்களை உற்சாகபடுத்திய வீடியோ இதோ!