“மக்களின் நல்லதுக்காக பண்ணிருக்காங்க..” 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டனி கருத்து.. விவரம் உள்ளே..

2000 ரூபாய் மதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டனி கருத்து - Vijay antony opinion on 2000rs withdrawal | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மே 19 ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2 ’. விஜய் ஆண்டனியே இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மூளை மாற்று அறுவை சிகிச்சையை கதைக் கருவாய் கொண்டு சமூக கருத்துகளை பேசும் படமாக வெளியாகியிருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை மக்கள் ஆரவாரமாக வரவேற்று வருகின்றனர். 

இதனிடையே தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ 2000 நோட்டு பண மதிப்பிழந்து வங்கி திரும்ப பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பரப்பரப்பாக பேசபட்டு வரும் நிலையில் ரசிகர்கள் சிலர் கடந்த 2016 ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்து வெளியான ‘பிச்சைகாரன்’ படம் வெளியான அதே ஆண்டில் இந்தியாவில் ரூ500 மற்றும் ரூ 2000 நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடைபெற்றது. தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகும் போது ரூ 2000 நோட்டுகளின் மதிப்பிழப்பு நடைபெற்றுள்ளது என்று வைரலாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை காண வந்தவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். பின் சந்திப்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தற்போது நிகழ்ந்து வரும் ரூ 2000 நோட்டு பணமதிப்பிழப்பு குறித்து கேட்கையில் அவர்,

“மக்களின் நலனுக்காக பண்ணிருக்காங்க.. முதல்ல 500ரூ, 1000ரூ நோட்டு செல்லாது என அறிவித்த பொது மக்கள் கஷ்டப்பட்டாங்க..  இப்போ 2000 ரூ  நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வந்ததும் நான் கேட்டு தெரிஞ்சிக்கிட்டது பொதுமக்களை பொறுத்தவரை பெரிய பாதிப்பு இல்லை.. யாரெல்லாம் பணத்தை பதுக்கி வெச்சிருக்காங்களோ அவங்கதான் பயப்படனும்.‌” என்றார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி.. 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் இரண்டாவது நாளில் 5.50 கோடியை தமிழ்நாட்டிலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் 7.30 கோடியும் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

‘தளபதி 68’ குறித்து அன்றே கணித்த அல்போன்ஸ் புத்திரன்..! இணையத்தில் வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு – விவரம் இதோ..
சினிமா

‘தளபதி 68’ குறித்து அன்றே கணித்த அல்போன்ஸ் புத்திரன்..! இணையத்தில் வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு – விவரம் இதோ..

கடும் கோபத்தில் நடிகை வேதிகா.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.. பின்னணி இதோ..
சினிமா

கடும் கோபத்தில் நடிகை வேதிகா.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.. பின்னணி இதோ..

காணமல் போன சுனைனா.! படக்குழுவினர் மீது கொதித்தெழுந்த ரசிகர்கள்..  - சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.. பின்னணி இதோ..
சினிமா

காணமல் போன சுனைனா.! படக்குழுவினர் மீது கொதித்தெழுந்த ரசிகர்கள்.. - சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.. பின்னணி இதோ..