தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக முன் நட்சத்திர நாயகனாகவும் ஜொலிக்கும் தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் தளபதி விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.
 
இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள தளபதி விஜய் ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவிற்கு சொந்தமான AMB CINEMAS தியேட்டரில் படம் பார்த்துள்ளார். மகேஷ் பாபுவின் திரையரங்கில் படம் பார்த்து முடித்து வெளியே செல்லும் தளபதி விஜயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Thalapathy Vijay watched a Movie today at @amb_cinemas in Hyderabad. @actorvijay #Varisu pic.twitter.com/RuXBfdMCZs

— Beast - The Movie (@sarathvijay967) August 15, 2022