பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகனாகவும் திகழும் அஜித் குமாரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வருகிறார்.

இதனையடுத்து முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அஜித்குமார்-H.வினோத்-நீரவ்ஷா-போனிகபூர் வெற்றிக் கூட்டணியில் 3வது திரைப்படமாக AK61 திரைப்படம் தயாராகி வருகிறது.

அஜித் குமாருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கும் AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. AK61 படப்பிடிப்பின் இடையில் இருந்த பிரேக்கில் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகளில் தனது பைக் ரைடிங்கை முடித்து விட்டு சமீபத்தில் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் தற்போது Ak61 திரைப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் குமார் கலந்து கொள்வதற்காக விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்றுள்ளார். தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அஜித்குமார் படப்பிடிப்பிற்கு புறப்பட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ…
 

Come On Clear The Stage He Is Ready To Rage 🔥🔥🔥 Once This Final Schedule Got Wrapped,We Will Get Regular UPDATES Regarding THALA 61 🤠#AK61 •• #AjithKumar pic.twitter.com/SjGrOW3HTB

— AJITHKUMAR FANS TEAM 👑 (@AKFansTeam) August 16, 2022