தென்னிந்திய திரையுலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் ஆக்ஷன் கிங்காக சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் நடிகர் அர்ஜுன். தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் மலையாளத்தில் விருன்னு, தமிழில் மேதாவி உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனராகவும் தனது மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தையும் அர்ஜுன் இயக்கி வருகிறார். இதனிடையே ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தீயவர் குலைகள் நடுங்க.

மேலும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் மூத்த மகனான ராம்குமார், நடிகர் விஷாலின் தந்தை G.K.ரெட்டி, அபிராமி வெங்கடாச்சலம், பிரவீன் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய பரத் ஆசிவகன் இசையமைத்துள்ளார்.

GS ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் பிறந்த நாளான இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த செகண்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Proudly presenting the Second look of @gsartsoffl #GArulKumar's #TheeyavarKulaigalNadunga#தீயவர்குலைகள்நடுங்க #TKNSecondLook@aishu_dil @akarjunofficial @off_dir_Dinesh @GkReddy1939 @praveenraja0505@AbhiramiVenkat3 @editorkishore @aarun666 @dineshashok_13 @DoneChannel1 pic.twitter.com/hYVapF1e7O

— Vishal (@VishalKOfficial) August 15, 2022