தமிழகத்தின் பிரபலமான சினிமா செய்தியாளர்களின் ஒருவராக திகழும் L.M.கௌஷிக் திடீரென மாரடைப்பால் காலமானார். நல்ல சினிமா விமர்சகராகவும் நமது கலாட்டா சேனலின் முக்கிய விஜே-வாகவும் திகழ்ந்த L.M.கௌசிக் தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக சினிமா குறித்த பல முக்கிய அப்டேட்களையும் வழங்கியவர்.

பல முன்னணி நட்சத்திர நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பல சினிமா ரசிகர்களும் L.M.கௌஷிக்கின் சமூக வலைதள பக்கங்களை பின்பற்றி வருகின்றனர். நமது கலாட்டா சேனலில் தென்னிந்திய திரையுலகின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை மிகச் சிறப்பாக L.M.கௌஷிக் பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் L.M.கௌஷிக் உயிரிழந்த செய்தி நேற்று ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. VJ, சினிமா செய்தியாளர், திரைப்பட விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்கிய 36 வயதே ஆன L.M.கௌஷிக்கின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ராகவா லாரன்ஸ், இயக்குனர் வெங்கட் பிரபு, நிவின் பாலி, இயக்குனர் மோகன் ராஜா, இயக்குனர் சக்தி சௌரராஜன், இயக்குனர் & நடிகர் M.சசிகுமார், ரித்திகா சிங், ஹரிஷ் கல்யான், வேதிகா,அஞ்சலி, அதிதி ராவ் ஹைதாரி, விக்ரம் பிரபு, சாயீஷா,இசையமைப்பாளர் தமன்.S, இசையமைப்பாளர் ஜிப்ரான்,இசையமைப்பாளர் டி.இமான், DD-திவ்யதர்ஷினி உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் அனைவரும் L.M.கௌஷிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Reputed film critic, movie tracker, and Galatta VJ @LMKMovieManiac passed away today, due to cardiac arrest. His demise is a huge personal loss & we here at Galatta extend our heartfelt condolences & strong support to the bereaved family in this hour of grief.#RIPKaushikLM 💔 pic.twitter.com/idv32QDlq7

— Galatta Media (@galattadotcom) August 15, 2022