தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யுத்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R உடன் இணைந்து கௌதம் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வர்கிறார். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பத்து தல திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.இந்த வரிசையில் அடுத்ததாக கௌதம் கார்த்திக் நடிப்பில் வித்தியாசமான பீரியட் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16 1947. 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ஏ.ஆர்.முருகதாஸ் புரோடக்சன்ஸ், PURPLE BULL என்டர்டைன்மென்ட் மற்றும் GOD BLESS என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் N.S.பொன்குமார் எழுதி இயக்கியுள்ளார். கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ரேவதி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் விஜய் டிவி புகழ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.S.K ஒளிப்பதிவு செய்யும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. தமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ள ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் டீசர் இதோ…