கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் திகழ்கிறார். முன்னதாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 67 திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சமீப காலங்களில் தொடர்ந்து தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் தளபதி விஜய் சந்தித்து வருகிறார். முன்னதாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தளபதி விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய் தற்போது மீண்டும் தனது மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யும் விதமாக மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை தனது பனையூர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மாற்றுத்திறனாளி நிர்வாகி ஒருவரை தளபதி விஜய் தூக்கிய புகைப்படம் தற்போது வெளியாகி வைரல்கி வருகிறது அந்தப் புகைப்படங்கள் இதோ…
 

இதயத்து அதிபதி...
தளபதி 😍@actorvijay @Jagadishbliss @BussyAnand #ThalapathyVijay #VarisuPongal2023 #VarisuPongal #Thalapathy67𓃵 pic.twitter.com/V7SJU88FK8

— Galatta Media (@galattadotcom) December 13, 2022

உன் ரத்தம், என் ரத்தம் வேறே இல்லை...
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை!❤️

PC : @TVMIoffl @actorvijay @BussyAnand #ThalapathyVijay #VarisuPongal2023 #Varisu #Thalapathy67𓃵 #Thalapathy pic.twitter.com/sDG1CD47lO

— Galatta Media (@galattadotcom) December 13, 2022