தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் பலம் வரும் தளபதி விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 படத்தில் இணைகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆல் டைம் ரெக்கார்ட்டாக சாதனை படைக்க தளபதி 67 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் தளபதி67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்றுள்ளதால் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. 

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முன்னதாக வாரிசு படத்தில் இருந்து வெளிவந்த ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி எனும் இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் என தொடர்ந்து சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளிவரும் நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நண்பா வாரிசு ஆல்பம்🔥 🎵❤🎧🥁" என பதிவிட்டுள்ளார். விரைவில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இசையமைப்பாளர் தமனின் இந்த பதிவு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

NANBA #VarisuAlbum 🔥🎵❤️🥁🎧 pic.twitter.com/KiyrN92SwL

— thaman S (@MusicThaman) December 13, 2022