தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர நாயகர்களின் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த வலிமை திரைப்படம் பக்கா ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 3வது திரைப்படமாக அஜித் - H.வினோத் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. 

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12-ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.  சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் வைரல் ஹிட்டான நிலையில், அடுத்த பாடலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் காசேதான் கடவுளடா என பதிவிட்டுள்ளதால் துணிவு பணத்தின் அடுத்த பாடலாக காசேதான் கடவுளடா எனும் பாடல் வெளிவரவுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அறிவிப்பு வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

#KaaseydhaanKadavuladaa 💰#காசேதான்கடவுளடா 💰

— Ghibran (@GhibranOfficial) December 13, 2022