சின்னத்திரையில் மாஸ் காட்ட வரும் மாஸ்டர் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | April 05, 2021 21:07 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பல திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் படமாக மாஸ்டர் உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இந்த படம் OTT-யிலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.
தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
மாஸ்டர் வந்தாச்சு!
தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவி-யின் 28 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடித்த
மாஸ்டர் | ஏப்ரல் 14 | 6.30 PM #SunTV #Master #MasterOnSunTV #VaathiComingToSunTV #WorldTelevisionPremiere pic.twitter.com/lo2BPNuGLy— Sun TV (@SunTV) April 5, 2021