தளபதி விஜயின் பீஸ்ட் Countdown ஸ்டார்ட்ஸ்....உறுதியானது ரிலீஸ் தேதி !
By Aravind Selvam | Galatta | February 05, 2022 15:26 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது,விஜய் பூஜா ஹெக்டே போன்றோர் தங்கள் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டனர்.சில பேட்ச் காட்சிகளின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதிசெய்துள்ளதாக நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடுவார்கள் என்று எதிர்பாக்கற்படுகிறது.
'Thalapathy' Vijay's BEAST release date confirmed - Here's the latest update!
05/02/2022 02:46 PM
Here is where you can watch Thalapathy Vijay's Beast after its theatrical run
01/02/2022 07:59 PM