பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் ஆகச் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

அடுத்தடுத்து சூர்யா நடிக்கும் மற்றும் தயாரிக்கும் திரைப்படங்களின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் “சிறுத்தை” சிவா இயக்கத்தில் புதிய #Suriya42 படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் சிவாவுடன் இணைந்து எழுத்தாளர் ஆதி நாராயணா கதைக்கு திரைக்கதை எழுதியுள்ள இப்படத்துக்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் மற்றும் UV CREATIONS வம்சி & விக்ரம் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், மிலன் கலை இயக்கம் செய்ய, சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். 

இப்படம் சூர்யா-தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் உருவாகும் 5-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் பூஜை இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை நடைப்பற்றது. நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த இதர அறிவிப்புகள் மற்றும் பூஜை புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.