தமிழ் சினிமாவின் இன்றியமையாத ஹீரோவாக உயர்ந்து மக்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் நடித்து வந்த ப்ரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் ஆண்டு தீபாவளி வெளியீடாக ப்ரின்ஸ் திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஆக்ஷன ப்ளாக் படமாக தயாராகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.

இதனையடுத்து ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் #SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதித்துள்ளது.

திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடிய டான் திரைப்படம் தற்போது 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் டான் திரைப்படத்தின் 100 நாட்கள் சாதனையை அறிவிக்கும் வகையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டான் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Cibi Chakaravarthi (@dir_cibi)