ஆகச் சிறந்த நடிகராக படத்திற்கு படம் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சீயான் விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பிரமாண்டமான திரைப்படமாக 3D தொழில் நுட்பத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் முன்னணி கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா.

20க்கும் மேற்பட்ட அட்டகாசமான கெட்டப்களில் நடித்துள்ள விக்ரம் உடன் இணைந்து கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ்,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வருகிற ஆகஸ்ட் 31–ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் கோப்ரா திரைப்படத்தின் ட்ரைலர் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

And it’s around the corner. #CobraTrailer #Cobra @AjayGnanamuthu @SrinidhiShetty7 @IrfanPathan @roshanmathew22 @7screenstudio @dop_harish #CobraFromAugust31 pic.twitter.com/de3wiP1D3A

— Chiyaan Vikram (@chiyaan) August 21, 2022