தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 3-வது முறையாக சிலம்பரசன்.TR-இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னதாக ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பத்து தல.கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்து தல திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை அனு சித்தாரா, சிலம்பரசன்.TR அவர்களுடன் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

A new video of #STR from the sets of #PathuThala with #AnuSithara ❤️@SilambarasanTR_ @i_anusithara @nameis_krishna @StudioGreen2 #SilambarasanTR pic.twitter.com/3S6w6mQJQ0

— Galatta Media (@galattadotcom) August 21, 2022