"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கபில் தேவ்!"- அடுத்த கட்டத்திற்கு நகரும் லால் சலாம்… ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பட ஷூட்டிங் குறித்த தகவல்,super star rajinikanth in lal salaam movie shoot update kapil dev | Galatta

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தில் தற்போது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில் தேவ் அவர்களும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கும் நிலையில், திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக திகழும் மோகன்லால் சுனில் சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 170-வது திரைப்படமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #தலைவர்170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து கிறார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் மற்றும் அதன் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் லால் சலாம் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில் தேவ் அவர்கள் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கிரிக்கெட்டின் தீவிர ரசிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி திரைப்படத்தில் கிரிக்கெட் உலகில் இருந்து ஒரு மிகப்பெரிய ஜாம்பவானின் நடிக்க வைக்க விரும்பியதாக தெரிகிறது. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கபில் தேவ் அவர்களை நடிக்க வைத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். இதனை அறிவிக்கும் வகையில் நேற்று (மே 18) கபில் தேவ் அவர்களோடு லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த புகைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் லால் சலாம் திரைப்படத்தின் படப் பூஜை நடைபெற்ற நிலையில் கடந்த (2023) மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கப்பட்டிருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபில் தேவ், விஷணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரோடு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…

 

 

View this post on Instagram

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

சினிமா

"ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் குறை கூறவில்லை!"- சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை இதோ!

ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த புது சர்ப்ரைஸ்... பிச்சைக்காரன் 2 பட ரொமான்டிக்கான ட்ரீட் இதோ!
சினிமா

ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த புது சர்ப்ரைஸ்... பிச்சைக்காரன் 2 பட ரொமான்டிக்கான ட்ரீட் இதோ!

'என் ஆக்ஷன் கலந்த காதல் கதை!'- அடுத்த அட்டகாசமான படைப்பின் அதிரடி அப்டேட் கொடுத்த சமந்தா... வைரலாகும் GLIMPSE இதோ!
சினிமா

'என் ஆக்ஷன் கலந்த காதல் கதை!'- அடுத்த அட்டகாசமான படைப்பின் அதிரடி அப்டேட் கொடுத்த சமந்தா... வைரலாகும் GLIMPSE இதோ!