சூப்பர் டீலக்ஸ் இயக்குனரின் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸ்... ஜீவி பிரகாஷ் கொடுத்த ஸ்பெஷல் GLIMPSE இதோ!

மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸின் குக்கூனு பாடல் வெளியீடு,Thiagarajan kumararaja in modern love chennai kukunnu song out now | Galatta

காட்சிகளுக்கு உள்ளே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகான விஷயங்களை சேர்த்து, எதார்த்தங்களோடு விளையாடி, அழுத்தமான உணர்வுகளை கூட போகிற போக்கில் கடத்தும் அசாத்திய திறமை கொண்ட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய திரைப்படங்கள் இரண்டு தான் என்றாலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர். அந்த வகையில் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படைப்பாக வெளிவரும் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸில் இருந்து ஜீவி பிரகாஷ் குமார் இசையில் தற்போது புதிய பாடல் ஒன்று வெளிவந்துள்ளது. தனது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களால் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படைப்பாக மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி வெப் சீரிஸ் தயாராகியுள்ளது. முன்னதாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகிய ஆந்தாலாஜி வெப் சீரிஸ்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாடர்ன் லவ் சென்னை வெளிவர இருக்கிறது.

முன்னதாக நெட்ஃபிலிக்ஸில் வெளிவந்த பாவ கதைகள் மற்றும் நவரசா, அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த புத்தம் புது காலை மற்றும் புத்தம் புது காலை விடியாதா ஆகிய ஆந்தாலஜி வெப் சீரிஸ்களின் வரிசையில்  சென்னையை மையப்படுத்திய அழகான 6 காதல் கதைகளை கொண்ட இந்த மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் சீரிஸின் 6 எபிசோடுகளை 6 அட்டகாசமான இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, குக்கூ, ஜோக்கர் மற்றும் கார்த்தியின் ஜப்பான் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன், காதல் மற்றும் வழக்கு எண் 18/9 படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்குனர் அக்ஷய் சுந்தர் ஆகியோர் தலா 1 எபிசோடை இயக்க, இவர்களுடன் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஒரு எபிசோடை இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் பாலாஜி தரணிதரன், இயக்குனர் ராஜு முருகன், ரேஷ்மா கட்டாலா, பிரதீப் குமார் S, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஆகியோரது கதைகளில் உருவாகி இருக்கும் இந்த மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் சீரிஸ் நாளை மே 18ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அசோக் செல்வன், ரித்து வர்மா, ரம்யா நம்பீசன், கிஷோர், விஜயலட்சுமி, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், வசுந்திரா, டிஜே பானு, வாசுதேவன் முரளி, ஸ்ரீ கௌரி பிரியா, வமிக்கா உள்ளிட்ட பலர் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் சீரிஸில், நடித்துள்ளனர். TYLER DURDUN AND KINO FIST  தயாரித்துள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலாஜி வெப் சீரிஸ்க்கு இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இதிலிருந்து ஜீவி பிரகாஷ் குமார் இசையில் உருவான குக்கூனு பாடல் தற்போது வெளியானது. சோசியல் மீடியாவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கும் அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

'என் ஆக்ஷன் கலந்த காதல் கதை!'- அடுத்த அட்டகாசமான படைப்பின் அதிரடி அப்டேட் கொடுத்த சமந்தா... வைரலாகும் GLIMPSE இதோ!
சினிமா

'என் ஆக்ஷன் கலந்த காதல் கதை!'- அடுத்த அட்டகாசமான படைப்பின் அதிரடி அப்டேட் கொடுத்த சமந்தா... வைரலாகும் GLIMPSE இதோ!

சினிமா

"ரொம்ப வருத்தி எடுத்துருச்சு!"- மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸின் கடினமான அனுபவங்களை பகிர்ந்த தியாகராஜன் குமரராஜா! வைரல் வீடியோ

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட புது ட்ரீட்... ரொமான்டிக்கான கறி குழம்பு வாசம் பாடல் இதோ!
சினிமா

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட புது ட்ரீட்... ரொமான்டிக்கான கறி குழம்பு வாசம் பாடல் இதோ!