‘பொன்னியின் செல்வன் 2’ - வை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி.. – இணையத்தில் வைரலாகும் அப்டேட் இதோ..

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி விவரம் இதோ - Jayam ravi next film with Director kiruthiga udhayanidhi | Galatta

தமிழ் சினிமாவிலிருந்து இந்த ஆண்டு பான் இந்தியா அளவில் வெளிவந்து உலகளவில் வெற்றி பெற்ற திரைப்படம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன். வசூல் அடிப்படையிலும் விமர்சனங்கள் அடிப்படையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு பின் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர் வரை அவர்களது அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பளவு அதிகரித்துள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக கதையின் நாயகனாக நடித்து கவனம் ஈர்த்த ஜெயம் ரவி அவர்களின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்போது அவர் மனிதன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அகமது இயக்கத்தில் நயன்தாரா வுடன் இணைந்து ‘இறைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.  அதை தொடர்ந்து இயக்குனர் ஆந்தனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே ஜெயம் ரவி வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் புவனேஷ் அர்ஜுனன் இயக்கும் ‘ஜீனி’ என்ற புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். தற்போது கோலிவுட்டில் பிஸியாக வலம் வரும் ஜெயம் ரவி தன் படங்களின் வரிசையில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் இயக்குனர் கிரித்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலின் படி, உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்து இந்த கூட்டணி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின் தொடர்ந்து காளி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இடையே பேப்பர் ராக்கெட் என்ற இணைய தொடரையும் இயக்கியுள்ளார். பீல் குட் திரைப்படங்களுக்கு பேர் எடுத்த இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதால் ஜெயம் ரவி உற்சாகத்தில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து லைகாவின் அடுத்த படைப்பு... கவனம் ஈர்க்கும் ஜெய்யின் புதிய பட அசத்தலான வீடியோ பாடல் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து லைகாவின் அடுத்த படைப்பு... கவனம் ஈர்க்கும் ஜெய்யின் புதிய பட அசத்தலான வீடியோ பாடல் இதோ!

பொன்னியின் செல்வன் 2 கிளைமாக்ஸ் மீதான விமர்சனங்களுக்கு சரியான விளக்கமளித்த தயாரிப்பாளர் சிவா ஆனந்த்! வைரல் வீடியோ இதோ
சினிமா

பொன்னியின் செல்வன் 2 கிளைமாக்ஸ் மீதான விமர்சனங்களுக்கு சரியான விளக்கமளித்த தயாரிப்பாளர் சிவா ஆனந்த்! வைரல் வீடியோ இதோ

விஷால்-SJசூர்யாவின் பக்கா மாஸ் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கொண்டாட்டம்... காரணம் என்ன?- ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ
சினிமா

விஷால்-SJசூர்யாவின் பக்கா மாஸ் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கொண்டாட்டம்... காரணம் என்ன?- ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ