சமுத்திரக்கனி, பவன் கல்யாண் கூட்டணியில் ரீமேக்காகும் ‘வினோதய சித்தம்’.. – அட்டகாசமான டைட்டிலுடன் வைரலாகும் Glimpse இதோ..

வினோதய சித்தம் தெலுங்கு ரீமேக் பட டைட்டில் இதோ - Samuthirakani Vinodhaya sitham telugu remake title revealed | Galatta

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான திரைபடங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகர் சமுத்திரகனி. தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மிக முக்கியமான திரைப்படங்களையும் இயக்கி இயக்குனராகவும் வலம் வருகிறார். அதன்படி கடந்த 2012 ஜீ5 தயாரிப்பில் சமுத்திரகனி இயக்கிய திரைப்படம் ‘வினோதய சித்தம்’. தம்பி ராமய்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரகனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஆரவாரமில்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகபெரிய அளவு வரவேற்பை பெற்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வெற்றி பெற்றது.

இந்நிலையில் அதிரடியாய் சமுத்திரக்கனி வினோதய சித்தம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி அப்படத்திற்கு #PKSDT என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இப்படத்தில் சமுத்திரகனி கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிக்கின்றார். தம்பி ராமய்யா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கவுள்ளார். சமுத்திரகனி இயக்கும் இப்படத்திற்கு பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் வசனம் மற்றும் திரைக்கதை எழுத இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

 

మన సమయం మొదలైంది ….💪💪💪…..
ఇక అంతా ఆనందమే బ్రో….❤️❤️❤️❤️❤️….. https://t.co/dBVs6xQepx@PawanKalyan @IamSaiDharamTej @thondankani @MusicThaman @vishwaprasadtg @vivekkuchibotla @bkrsatish @peoplemediafcy @ZeeStudios_ @zeestudiossouth#BroTheAvatarFromJuly28🌀 pic.twitter.com/kl0n2ztRNM

— P.samuthirakani (@thondankani) May 18, 2023

இந்த  படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் #PKSDT படத்தின் டைட்டிலை அட்டகாசமான வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘BRO’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் வரும் ஜூலை மாதம் 28 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது படக்குழு.. தமன் இசையில் அட்டகாசமான மோஷன் போஸ்டராக வெளியான டைட்டில் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது. திரைத்துறையில் நடிகராக பிஸியாக இயங்கி வரும் சமுத்திரகனி தற்போது மீண்டும் இயக்குனராக களமிறங்கியிருப்பதை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.  

 

'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் ராசு காலமானார்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. ரசிகர்கள்..
சினிமா

'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் ராசு காலமானார்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. ரசிகர்கள்..

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் இதோ..

“தேவையே இல்லன்னு சொல்லியும் நான் வெச்ச காட்சிகள்..” சூப்பர் டீலக்ஸ் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா  - Exclusive Interview இதோ..
சினிமா

“தேவையே இல்லன்னு சொல்லியும் நான் வெச்ச காட்சிகள்..” சூப்பர் டீலக்ஸ் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா - Exclusive Interview இதோ..