“மாமன்னன் அண்ணனுடைய கடைசி படமா?..” உண்மையை உடைத்த அருள்நிதி.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

உதயநிதி ஸ்டாலின் கடைசி படம் குறித்து அருள்நிதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வீடியோ உள்ளே - Actor Arulnidhi about udhayanidhi stalin last film | Galatta

தமிழ் சினிமாவில் தனித்துவமாக தேர்ந்த கதைகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வருகிறார். தற்போது அவர் டிமாண்டி காலணி 2 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான திருவின் குரல் திரைப்படம் அட்டகாசமான திரில்லர் திரைப்படமாக அருள்நிதிக்கு அமைந்தது. தற்போது அவருடைய அடுத்த படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’ இயக்குனர் சை கௌதம ராஜ் இயக்கத்தில் கிராம பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அருள்நிதி வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அருள்நிதி நடிப்பில் உருவான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வரும் மே 26 ம் தேதி தமிழகமெங்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் நடிகர் அருள் நிதி நமது கலாட்டா சினிமா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில்நடிகரும் தயாரிபாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து கேட்கையில்,"முதலில் இயக்குனர் சாந்த குமார் சார்  அண்ணன சந்திச்சுட்டு தான் என்கிட்ட வந்தாரு.. அந்த நேரம் அண்ணா என்னிடம் சொன்னார். இந்த படம் ஒரு நடிகருக்கு முக்கியமான படமாக இருக்கும்..  நிச்சயம் முக்கியமான படமாக இருக்கும் னு சொன்னார். அந்த படம் அண்ணா சொல்லி தான் என்கிட்ட வந்தது. பொதுவா என் படங்கள் பற்றி பேசுவார்." என்றார் அருள்நிதி.

மேலும் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிகராக அவர்களுடைய கடைசி படமாக ‘மாமன்னன்’ திரைப்படம் இருக்கும் என்பது குறித்து ஒரு நடிகராக குடும்பத்தாரா உங்கள் மனநிலை என்ற கேள்வியை அருள்நிதி அவர்களிடம் கேட்கையில் அவர், “எனக்கு உதயநிதி அண்ணக்கு அது தான் கடைசி படமாக இருக்குமா என்று தெரியவில்லை.. அண்ணா க்கு சினிமா மீது மிகபெரிய ஆர்வம் உள்ளது. அவர் நிறைய படங்களை பார்பார். அவர் நிறைய படங்களை தயாரிக்க வேண்டும் நினைப்பார். அதனால் ஒருவேளை அது அவருடைய கடைசி படமாக இருந்தால் நிச்சயம் எங்களுக்கு வருத்தம் தான்.”’ என்று தெரிவித்தார் நடிகர் அருள்நிதி.

மேலும் அருள்நிதி படக்குழுவினருடன் இணைந்து கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

ஜெய்பூரில் பிரம்மாண்ட திருமணம்.. காதலியை கரம் பிடிக்கும் நடிகர் சர்வானந்த் – குவியும் வாழ்த்துகள்.. விவரம் இதோ..
சினிமா

ஜெய்பூரில் பிரம்மாண்ட திருமணம்.. காதலியை கரம் பிடிக்கும் நடிகர் சர்வானந்த் – குவியும் வாழ்த்துகள்.. விவரம் இதோ..

'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் ராசு காலமானார்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. ரசிகர்கள்..
சினிமா

'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் ராசு காலமானார்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. ரசிகர்கள்..

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் இதோ..