"ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் குறை கூறவில்லை!"- சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை இதோ!

ராஷ்மிகா பற்றிய சர்ச்சைகளுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை,aishwarya rajesh important statement about rashmika mandanna controversy | Galatta

தமிழ் சினிமாவிலும், தென்னிந்திய சினிமாவிலும் குறிப்பிடப்படும் சிறந்த நடிகையாக உயர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அட்டகாசமான படைப்புகள் வெளிவர இருக்கின்றன. இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடம் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. 

குறிப்பாக, “புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் அது போல் எனக்கு விருப்பமான பாத்திரங்கள் கிடைக்கும் பட்சத்தில் தெலுங்கிலும் நடிப்பேன்” என் பதிலளித்துள்ளார். ஆனால் இது ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருந்தது போன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷ்மிகா மந்தனாவை ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சைக்குரிய விதத்தில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தரப்பில் இருந்து விளக்கமளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில்,

"அன்பிற்குரிய நண்பர்களே … 

நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்'என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. 

இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்."

புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன்

ஐஸ்வர்யா ராஜேஷ். 

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அந்த முழு அறிக்கையை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

From the desk of Aishwarya Rajesh#AishwaryaRajesh @aishu_dil pic.twitter.com/J78oNsWQ9B

— Yuvraaj (@proyuvraaj) May 17, 2023

சினிமா

"ரொம்ப வருத்தி எடுத்துருச்சு!"- மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸின் கடினமான அனுபவங்களை பகிர்ந்த தியாகராஜன் குமரராஜா! வைரல் வீடியோ

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட புது ட்ரீட்... ரொமான்டிக்கான கறி குழம்பு வாசம் பாடல் இதோ!
சினிமா

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட புது ட்ரீட்... ரொமான்டிக்கான கறி குழம்பு வாசம் பாடல் இதோ!

சினிமா

"3வது படத்திற்கு ரசிகர்கள் காத்திருக்க மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸ் தொடங்கியது எப்படி?"- தியாகராஜன் குமாரராஜாவின் பதில் இதோ